Thursday, 29 October 2015

அறிவுசார் சொத்துரிமை – ஒரு முன்னோட்டம்

அறிவுசார் சொத்துரிமை – ஒரு முன்னோட்டம்
ஆர்.சந்திரசேகர். B.A.,B.L., PGD Patents Law
அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர்

நூலகம்  பேசுகிறது. இந்த இதழின் பெயரில் இருந்து நாம் இந்த கட்டுரையை தொடங்குவோம்.

நூலகம் பேசுகிறது, நாம் தான் நம் காதுகொடுத்து கேட்பதில்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு தலைப்பில் பேசுகிறது. நமக்கு பிடித்த தலைப்பை நாம் தேர்ந்தெடுத்து படிக்கிறோம். பின்னர் நாம் பெற்ற அறிவை கொண்டு பல செயல்களை மேற்கொள்கிறோம். அப்படிப்பட்ட செயல்கள் நம் சமுதாயத்தை முன்னேற்ற பெரிதும் உதவ வேண்டும்.

நாம் பெற்ற அறிவு மூலம் பெரும் படைப்புகள் நம்மையும் நம்மை சுற்றி உள்ள சமுகத்தையும் முன்னேற்ற வேண்டும்.

ஒரு மனிதன் இருவிதமாக சொத்துரிமைகளை பெறலாம்.
     1 அசையும் மற்றும் அசையா சொத்து
     2 அறிவுசார் சொத்துரிமை மற்றும் நன்மதிப்பு [Good will]

முதலில் குறிப்பிட்ட சொத்து என்பது நம் பொருளை பயன்படுத்தி அடைவதாகும். இரண்டாவதாக குறிப்பிட்ட சொத்து என்பது நம் அறிவை பயன்படுத்தி படைப்பதாகும்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் அறிவுசார் சொத்துரிமையின் தாக்கத்தை இங்கு காண்போம்.

உதாரணத்திற்கு.
     நாம் ஒரு இரயில் நிலையத்தில் நின்று நம்மை சுற்றி ஒரு முறை பார்ப்போம். இங்கு பலவகையான அறிவுசார் சொத்துரிமைகளை காணலாம்.

1.       புத்தகம் – கடைகளில் விற்கும் பலவகையான புத்தகங்கள் பதிப்புரிமையின் கீழ் வருகிறது.
2.       தின்பண்டங்கள் – பிஸ்கட், சாக்லேட் மற்றும் குடிதண்ணீர் ஆகியவை விற்கப்படும் என்பது வியாபார சின்னம் ஆகும்.
3.       புதியதாக கண்டுபிடிக்கபட்ட்ட நவீன கண்காணிப்பு கேமரா – காப்புரிமையின் கீழ் வருகிறது.
4.       இரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பில் உள்ள  நாற்காலி, மேஜை மற்றும் கருவிகள் – தொழிற்சாலை வடிவமைப்பின் கீழ் வருகிறது.
5.       ஹிமாச்சல் ஆப்பிள், டார்ஜெல்லிங் டீ, சென்னபட்னா பொம்மைகள், ஆகியவை புவியியற் குறியீட்டின் கீழ் வருகிறது.
6.       இவை தவிர ஒரு விவசாயி புதிய தாவரவகைகள் மற்றும்  விதைகளை கண்டுபிடித்தால் அதுவும் அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வரும்.

மேற்ச்சொன்ன பலவகையான அறிவுசார் சொத்துரிமைகளை நாம் அன்றாடம் நம் வாழ்வில் பார்க்கும், பயன்படுத்தும், பொருட்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு நம்மை சுற்றி உள்ள பொருட்கள் நமக்கு உபயோகிக்க கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஒரு கண்டுபிடிப்போ, வியாபார சின்னமோ, படைப்புகளோ உரிய சட்ட பாதுகாப்பு இல்லை என்றால் நம் சமூகத்திற்கு அறிமுகமாகாது. அது அவர்களின் தனிப்பட்ட சொத்தாகதான் இருந்திருக்கும். எனவே ஒருவர் தன் அறிவை பயன்படுத்தி உருவாக்கப்படும் கண்டுபிடிப்போ, வியாபார சின்னமோ, படைப்புகளோ அதன் உரிமையாளர் எவ்வித தயக்கமும் இன்றி இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்த இந்த அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் பெரிதும் இன்றியமையாததாகும்.


அறிவுசார் சொத்துரிமை மற்றும் அதன் சட்டங்களை பற்றி மேலும் அடுத்த இதழில் பேசுவோம்.

No comments:

Post a Comment